CAA போராட்டத்தால் எஜமானுக்கு கோபம் வரும் – தயாநிதி மாறன் சாடல்

117

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், உயிரோடு இருந்தாலும், செத்தாலும் ஆதார் இருக்கும்போது, 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு என கேள்வி எழுப்பினார்.

கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை உள்ளிட்ட சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததாக கூறும் அதிமுக மற்றும் பாமக, வாக்களித்த மக்களை நினைத்து பார்க்கவில்லை என்றும் இது போன்ற சட்டங்களுக்கு எதிராகா போராடும் மக்களுக்கு ஆதரவாக திமுக இருக்கும் எனவும் கூறினார்.

முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை திணிக்க நினைத்தால், மோடியையும், அமித்ஷாவையும் பதவியில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், மதத்தின் பெயரில் நாட்டை பிரிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of