டிஆர்டிஒவின் ஏவுகணை சோதனை வெற்றி | DRDO | India

245

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் அரங்கேற்றிவருகிறது. மேலும், இந்தியாவை அச்சுறுத்தும் விதத்தில் அந்நாடு சமீபத்தில் ஏவுகணை சோதனையும் மேற்கொண்டது.

இந்நிலையில், ராணுவ டாங்கிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த சோதனை ஆந்திர மாநிலம் கர்னூல் நடந்தப்பட்டதாக டிஆர்டிஒ தெரிவித்துள்ளது.