கரூரில் சாயக்கழிவு வாய்க்காலில் கலப்பதால் குடிநீர் பாதிப்பு

731

கரூர் செல்லாண்டிபாளையம் ராஜவாய்க்காலில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை கழிவுகள் கலப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் வாய்க்காலை அடைத்ததால், கழிவுகள் சாலையில் வழிந்தோடியது.

இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவு நீர், ராஜவாய்காலில் கலப்பதாக அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில்  ராஜவாய்க்காலில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை கழிவுகள் கலப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் வாய்க்காலை அடைத்தனர். இதனால் கழிவுகள் வாய்காலில் இருந்து வெளியேறி சாலைகளில் வழிந்தோடியது.

இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வாய்க்கால் அடைப்பை சரி செய்தனர்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement