குடிநீர் திருடும் அவலம்!

335

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் காலி குடங்களுடன், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீருக்கு வழி இல்லாததால் நீரேற்று நிலையத்திற்கு வரும் லாரிகளில் இருந்து திருட்டுத்தனமாக குடிநீரை பிடித்து செல்கின்றனர்.

அவர்களை லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தாலும், அதை கண்டு கொள்ளாமல் பரிதாபமாக தண்ணீரை பிடித்து செல்கின்றனர் குடுமிப்பிடி சண்டையும் நடக்கிறது.

குடங்களில் பிடித்து வைத்துள்ள நீரையும் வேறு வழியின்றி மக்கள் திருடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்தை போக்க அரசு தேவையான அளவு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of