மாற்றுத்திறனாளி ஊர்தி உதவியாளரை அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்தது, நிர்பந்தித்தது தொடர்பாக விசாரணை

502

கரூரில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் அலுவலகத்தில், ஊர்தி உதவியாளரை அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்தது, பாத்திரங்களை கழுவ நிர்பந்தித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

கரூரை மாவட்டஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேப்பங்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஊர்தி உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மிகவும் தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்தது. அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்ததுடன், தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுமாறு சுரேஷ்குமாரை நிர்பந்தித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிப்பதில்லை என்றும் சுரேஷ் குமார் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ஜான்சி மற்றும் சுரேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சுரேஷ் குமார் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அலுவலகம் குப்பையாக இருந்ததால் தான் உட்பட அனைவரும் சேர்ந்து அலுவலகத்தை சுத்தம் செய்ததாகவும் விளக்கம் அளித்தார்.

Advertisement