போலிசாரின் திமிர் பேச்சு… வாலிபரின் உயிர் போச்சு!

462

சென்னை ஐ.டி.நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருபவ ராஜேஷ். இவர் கடந்த ஜனவரி 25ம் தேதி பாடி அருகே ஐ.டி. பெண் ஊழியரை காரில் ஏற்றிவிட்டு மற்றொரு ஊழியருக்காக காத்திருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், பெண் ஊழியர் முன்பாகவே ராஜேஷை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும், இதேபோன்று  திருவொற்றியூரில் காரை நிறுத்திய போதும் பணம் கேட்டு காவல்துறையினர் தகராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஓட்டுநர் ராஜேஷ், மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனது தற்கொலைக்கு முன்னர் ஓட்டுநர் ராஜேஷ் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில், தற்கொலைக்கு காவல்துறையினரே காரணம் என்றும் ஒட்டுநர்களை தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாதம் ஒரு ஓட்டுநர் தற்கொலை செய்துகொள்வார்கள் எனவும் தனது தற்கொலையே கடைசியாக இருக்கட்டும் எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.