சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை!

113

ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வட்டார போக்கு வரத்து அலுவலர் ஜெயபாஸ்கர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிகுமார் முன்னிலை வகித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.விலைமதிக்க முடியாத மனித உயிர் இழப்புகளை தடுக்கவே தமிழக அரசு வருடந்தோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்துகிறது.

வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளே விபத்துகளில் அதிகம் பேர் உயிர் இழப்பதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தை பருவத்தில் வாகனம் ஓட்டக் கூடாது. குழந்தை பருவத்தில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். செல்போன் பேசிக் கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டக் கூடாது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினார்.