ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் பணம் செலுத்தலாம்

1036

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான விவரங்களை parivahan.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணத்தை இணையத்தளம் மூலம் வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண ரசீதுடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று தகுந்த பரிசோதனையில் பங்கேற்று உரிமம் பெறலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement