போதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு

282

இலங்கையில் பெரும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது.

இருப்பினும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து முன்னாள் அதிபர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இலங்கையில் ஜூன் 23 முதல் ஜூலை முதல் தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னர் தண்டிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.