போதை ஒழிப்பு தினம் – நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

329

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் மாணவர்கள் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 26 போதை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.போதை ஒழிப்பு தினமான இன்று  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

அதன் ஒரு அங்கமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள்,பொதுமக்களுக்கு “I am  A Proud TeeTotaller” (போதைவகைகளை வெறுப்பதில் பெருமை கொள்கிறேன்) என்ற வாசகங்கள் கொண்ட சிறிய அளவிலான அட்டைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறையினரும் முழு ஆதரவளித்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

 

நாளுக்கு நாள் போதைகளுக்கு மாணவர்களும்,பல்வேறு நபர்களும் அடிமையாகி வரும் அபாய நிலையில், போதைக்கு எதிராக மாணவர்களே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of