“குடிச்சிட்டா வண்டிய ஓட்டுற” – இரு உனக்கு..! – டிராஃபிக் போலீஸ் அதிரடியால் அதிர்ந்த இளைஞன்..!

579

 நெல்லை மாநகர பகுதியில் விபத்துக்களை தவிர்க்க மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம் டாமோர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரமும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம், மது அருந்தி விட்டு ஓட்டினால் ரூ.15 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாநகர போக்குவரத்து போலீசார் மூலம் பதிவு செய்யப்படும் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்குகள் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் ரவிசங்கர் முன்னிலையில் மாலை நேர நீதிமன்றங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.

நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த 25ம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  ஹரீஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். நெல்லை பேட்டை மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அப்போது ஹரீஸ் (21) மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை மறுநாள், நெல்லை மாலை நேர நீதிமன்ற மாஜிஸ்திரேட் பழனி, விசாரித்து, அச்சுறுத்தும் வகையில் வேகமாக பைக் ஓட்டியது (மோட்டார் வாகன சட்டம் 181), மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது (மோட்டார் வாகன சட்டம் 185) ஆகியவற்றுக்காக ஹரீசுக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த அபராதம் வாகன ஓட்டிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of