அதிவேகத்தில் வந்த கார்..! தூக்கி எறியப்பட்ட இளைஞர்கள்..!

986

காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் அபிலாஷ். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். முழு போதையில் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 இளைஞர்களும் அடித்து தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதணையடுத்து பயந்து போன அபிலாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் சப்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அபிலாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் தான் காரை ஓட்டவில்லை என கூறிய அபிலாஷ் பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of