பெண்களிடம் ஆபாசமாக பேசிய காவலர்.. தடுத்து நிறுத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு..

3628

உத்திரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள கமல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிஷான்லால். இவர், தனது குடும்ப உறுப்பினர்களோடு, திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரி, பெண்கள் குறித்து தவறான கருத்துகளை கூறி, அத்துமீறியுள்ளார். இதுபற்றி கிஷான்லால் கேட்டதற்கு, காவலரும், அவரது நண்பர்களும் கடுமையாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், பெரும் காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், போதையில் இருந்த காவலர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement