முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிப்படுகொலை

1080
Rowdy-Murder

மதுரையில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரையில் அடுத்தடுத்த 4 கொலைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மீது மதுரை மாநகர் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் ஜெயக்குமார் இரவு வீடு திரும்பும் போது மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் முழுவதும் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நடுரோட்டில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதனை தடுப்பதற்கு உடனடியாக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of