சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதள விளம்பரங்கள்

470

வேலைவாய்ப்பு அளிப்பதாக சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதள விளம்பரங்களை நம்பவேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை தேடும் நபர்களுக்கும், சாகர்மாலா திட்டத்தின் உண்மையான பங்குதாரர்களுக்கும் இ-மெயில் மூலம் http://sagarmala.org.in/ என்ற போலியான இணையதள முகவரி அனுப்பப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி இணையதளம் சாகர்மாலா திட்டத்தின் உண்மையான இணையதளம் போன்று இருப்பதாகவும், அதில் பொறியாளர் மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்கள் குறித்த போலி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பவேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சாகர்மாலா திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் http://www.sagarmala.gov.in/ என்பதே உண்மையான இணையதளம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.