மகனுக்கு பிரச்சாரம் செய்து! சர்ச்சையில் சிக்கிய துரைமுருகன்!

879

1938-களில் இந்திக்கு எதிராக தமிழகம் பெரும் போராட்டத்தை கண்டது. ராஜாஜி, 1937ல் பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

பெரியார், அண்ணா என பல தலைவர்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரச்சினை தீவிரமானதால்,1940 பிப்ரவரி 21ம்தேதி கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்டது.

1967ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, இந்தியை திணிக்க நினைத்த காங்கிரசால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை.

இப்படியான வரலாறு கொண்ட ஒரு கட்சியின் பொருளாளர் துரைமுருகன், வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தனது மகன் கதிர்வேல் ஆனந்த்திற்கு ஆங்கிலப் புலமை இருப்பதால் அவரை லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

நாடாளுமன்றம் செல்ல ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருப்பது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு எதிராக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of