தேமுதிகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கு! கிண்டல்!

673

கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லையே என்ற விரக்தியோ, அல்லது பேச்சுவார்த்தை விஷயத்தை இப்படி துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டாரே என்ற அவமானமோ தெரியவில்லை.

திமுக மீது சுதீஷ் சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கு துரைமுருகன் காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

“தேமுதிக நிர்வாகிகள் மாறி மாறி பேசி வருகிறார்கள். என்கிட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிக வந்தாங்க. அப்போ என்னுடைய நிலைமையை எடுத்து சொன்னேன்.

அவ்வளவுதான்.தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவுமே இல்லை. சொந்த காரணத்திற்காக தேமுதிக நிர்வாகிகள் எதுக்காக என்னை சந்திக்கணும்? தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் பேச்சுவார்த்தை நடத்தணும்? தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது.

எனக்கு மோகன் ராஜைத் தெரியும், சுதீஷைத் தெரியும். நேற்று வந்த 2 பேரையும் யார் என்றே தெரியாதுதேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

தேமுதிககாரங்க ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை. சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார்.

மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காகவே இப்போது எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்”

என்றார் துரைமுருகன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of