தமிழக அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிமுக நிர்வாகியே செய்த கொடுமை..

8438

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் 90 சதவீத தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரை தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் துரைக்கண்ணு-விற்கு இரங்கல் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் ஒருவருக்கு அதிமுக-வை சேர்ந்த ஒருவரே இரங்கல் தெரிவித்து இருக்கும் சம்பவம் நெல்லை மாநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement