“ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் உளறல்”.. கருப்பணனை டிஸ்மிஸ் செய்க..! – ஆளுநரிடம் துரைமுருகன் முறையீடு

216

ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் கருப்பணன் உளறியுள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து அமைச்சர் பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலாலிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் முறையிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக வென்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் என பேசியுள்ளதாக துரைமுருகன் கூறியுள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் அமைச்சர் கருப்பணன் செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து கருப்பணன் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், அதற்குரிய நடவடிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுக்க வேண்டும் எனவும் திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியின் மரபை மீறி நடந்துகொண்ட ஒருவர் அமைச்சரவையில் இனி இருக்கக்கூடாது எனக் கூறியுள்ளார். திமுகவுக்கு வாக்களித்தவர்களை பழிவாங்கும் நோக்கில் அமைச்சரின் பேச்சு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள செண்பகப்புதூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதியே ஒதுக்கும் என அமைச்சர் கருப்பணன் பேசியதாக துரைமுருகன் கூறியுள்ளார். இதற்கான ஊடக ஆதாரங்களையும் தனது புகார் மனுவில் அவர் இணைத்துள்ளார்.

ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சரவையில் இருந்து அமைச்சர் கருப்பணனை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என துரைமுருகன் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறிவிட்டதாகவும் கூறியுள்ளார். துரைமுருகன் புகார் மனு மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

அமைச்சர் கருப்பணனை பொறுத்தவரை சர்ச்சைப் பேச்சுக்கு பஞ்சமில்லாதவர். ஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றில் மிதந்த நுரையை சோப்பு நுரை என சீரியஸ் காமெடி அடித்தவர். அண்மைக்காலமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த அவர் இப்போது அரசு நிதி ஒதுக்கீடு பற்றி பேசி வம்பில் மாட்டிக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of