நமது கண்களில் தூசுப்பட்டால்…. எச்சரிக்கையூட்டும் தகவல்கள்!!!

351

நமது கண்களில் தூசுப்பட்டால்…. எச்சரிக்கையூட்டும் தகவல்கள்!!!

நமது உடலின் உள்ள பல உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண். இந்த கண்களால் தான் நாம் உலகத்தையே பார்க்கிறோம்…

ஆனால் நமக்கே தெரியாமல் நாமே நம் கண்களை ஆபத்துக்குள்ளாக்குகிறோம், எப்படின்னா ?

கண்ணுக்கு தெரியாத ஒரு சில தூசி நம் இமைகளில் படும்போது இமைகள் அசைவினால் கண்ணுக்கு செல்கிறது.இதனால் கண் அரிப்பு ஏற்படும். அப்போது நமக்கே தெரியாமல் கண்ணைத் தேய்க்கிறோம்

தேய்க்கும் போது நமக்கு இதமாக இருந்தாலும் பிறகு எவ்வளவு ஆபத்து ஏற்படுகிறது என்பதை தான் இந்த குறிப்பில் பார்க்கப் போகிறோம்..

eye problem

கண்களை தேய்ப்பதால் வரும் ஆபத்தை தெரிந்துக்கொள்ள 7 குறிப்புகள்…

  1. நமது கைகளால் அநேக வேலைகளை செய்கிறோம்… அதனால் அதிகமான பாக்டீரியா நம் கண்களுக்குப்புலப்படாமல் காணப்படும்..இந்த கைகளோடு நம் கண்களைத் தேய்க்கும்போது நம் கண்கள் கான்ஜுண்ட்டிவிடிஸ் அதாவது இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
  2. கண்களைத் தொடர்ந்து தேய்ப்பதால் கண்களின் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை நிரந்தரமாக இழக்க செய்கிறது.
  3. கண்களின் எரிச்சலால் அழுக்கு, சேர சேர கட்டித்தன்மை உருவாகி பார்வை நரம்பை சேதப்படுத்தும், மற்றும் கண் அழுத்த நோய் ஏற்படும்.
  4. கெரடோகோனஸ் எனப்படும் கார்னியாவை முதலில் சேதப்படுத்தும், கார்னியாவை பலவீனமடையவும் செய்யும்.
  5. கண்களில் ஏற்பட்ட தூசியால் எரிச்சல் உண்டாகும். கார்னியாவை கிழித்துப் புண் ஏற்படுத்தும்.
  6. நம் கண்களைத்தேய்ப்பதால் நமது புருவத்தைவிட கண்விழிகள் தான் அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்க்க்கூடாத அளவுக்கு கூச்சத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில் நம் கண் இமை நெகிழ்ச்சியை இழக்க நேரிடும்.
  7. கிட்டப்பார்வையை மோசமாக்கும் மயோபியா என்பது கிட்டப்பார்வை உள்ள நோயாகும், கண்களைத் தேய்ப்பது இந்த நிலையை மேலும் மோசமாக்க கூடும்.

eye looking

கண்களில் எரிச்சல் ஏற்பட்டவுடன் செய்யவேண்டியவை,

ஒரு சுத்தமான துணியை சூடான (மிதமான) அல்லது குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். பிறகு கண்களை மெதுவாக துடைத்து எடுக்கவும்.