“இனி குப்பையை விற்கலாம்” – சென்னை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி..!

850

வீட்டில் தேவையற்ற கழிவுகளை விற்பனை செய்ய ஒரு இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில், ஒரு நாளைக்கு 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில், மாநகரில் உள்ள மையங்களில் குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு 200 மையங்களில் குப்பைகள் மறு சுழற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம், பொது மக்கள் தஙகளது வீடுகளில் உள்ள உபயோகிக்காத பொருட்களை, கழிவுகளை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் https://www.madraswasteexchange.com/#/ என்ற செயலியை தொடங்கி வைத்துள்ளார்.மேலும், இதில் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் என இருவருமே இணைந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement