இதனால் தான் அவர் அப்படி சொன்னார்! டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி!

807

இந்திய ஓட்டப்பந்தைய வீராங்கனை டுட்டீ சந்த் ஆவார். இவர் தனக்கு சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகிய பெண்ணை, காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பெண்ணுடன் இணைந்து எதிர்காலத்தில் வாழப்போவதாகவும் அறிவித்தார்.

இதுகுறித்து டுட்டீயின் சகோதரி சரஸ்வதி சந்த் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“டுட்டீ இதனை தன் விருப்பப்படி கூறவில்லை. டுட்டீ காதலிப்பதாக கூறிய அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்யுமாறு அவளை பலவந்தப்படுத்தியும், மிரட்டியும் வந்துள்ளனர். இவை அனைத்தும் டுட்டீயின் சொத்திற்காகவும், அவர்களின் சுயலாபத்திற்காகவும் செய்துள்ளனர்.

இவர்களால் டுட்டீயின் வாழ்க்கையும், சொத்துக்களும் ஆபத்தில் உள்ளது. எனவே டுட்டீக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும் டுட்டீ சிறு பிள்ளை அல்ல.

ஒரு ஆணை திருமணம் செய்ய வேண்டுமா, பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமா என்பது குறித்து அவள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், டுட்டீ இவ்வாறு பேச வேண்டும் என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of