இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை

176
E-cigarettes

தமிழகத்தில் இ-சிகரெட் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என தெரிவித்திருந்த நிலையில், இன்று அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் இ-சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here