வாழ்வா, சாவா நிலையில் பூமி..?

962

பருவநிலை மாறுபாட்டால் இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த குழு, உலகின் ஒட்டு மொத்த வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமானால் கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்ததை போல கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

அப்படி கடும் வெப்பத்திற்கு இந்தியா இலக்கானால் நாடு முழுவதும் சுமார் 2,500 பேர் வரை வெப்பத்தை தாங்க இயலாமல் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 2030-ம் ஆண்டு முதல் 2052-ம் ஆண்டிற்குள் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் மோசமாக பாதிக்கப்படும்.

இந்திய துணைகண்டத்தில் கொல்கத்தா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரிப்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்படும்.

உணவு பொருட்கள் விலை உயர்வு, வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுP

Advertisement