இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம், இயற்கை சீற்றங்களால் மக்கள் அச்சம்

339

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் அண்மையில் 7.5 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா உருகுலைந்தது. இந்த இயற்றை பேரழிவுகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இதில் பலர் மாயமாயினர், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தோனேசியாவின் ஜவா மற்றும் பாலி தீவுகளில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of