பாகிஸ்தானில் 5.8 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake in Pakistan

473

பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு நேற்று காலை 5.8 ரிக்ட்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அந்நாட்டின் வடக்கு பகுதிகளான பெஷாவர், மர்டன், மலகண்ட் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட இதே அளவிலான நிலநடுக்கத்தில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.