பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake

165

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 7.7 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.