ஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

460

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் சனிக்கிழமை வெளியிட்ட ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி:
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் புனிதமான திருநாளில் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்-அப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் என எடுத்துரைத்தார் இயேசு கிறிஸ்து. கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்தப் புனித நாளில் உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையட்டும். சகோதரத்துவம் தழைக்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of