தமாகா-வுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு

622

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இவர்களுக்கு தஞ்சை தொகுதியை ஒதுக்கப்பட்டது. முன்பே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கூறியது போல தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார்.

இவர்கள் சைக்கிள் சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர், ஆனால் இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், தஞ்சை தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் தமாகா வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of