முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை

410
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
முதல் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 11ந்தேதி தொடங்குகிறது. பின் தொடர்ந்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of