கஜா புயல் எதிரொலி: சென்னை, கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

596

கஜா புயல் நெருங்கி வருவதை அடுத்து சென்னை, கடலூர் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கஜா புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் கரையை நோக்கி நெருங்கி வருவதால், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Advertisement