இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் – டிரம்ப்

967

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவும், ராணுவ உறவு வைக்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. மீறும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனக்கூறியுள்ளது.

இந்த எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க கடந்த வாரம் ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் நவம்பர் 4 ம் தேதிக்கு பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை பார்த்துக்கொள்கிறோம் அமெரிக் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement