ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரா? ரவிச்சந்திரகுமாரா? உளறிய பழனிச்சாமி!

481

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து அதிமுகவினர் சிலர் ஓட்டுக் கேட்க வரும் போது பேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றி கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.

தேனியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது முதல்வர் பழனிச்சாமி, தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்பதற்கு பதிலக ஓ.பி.ரவிச்சந்திரகுமார் என பேசினார். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே முதல்வருடன் இருந்த அமைச்சர் உதயக்குமார் தவறாக சொல்வதை அவரிடம் எடுத்துக் சொன்னார்.இதனால் உஷாரான முதல்வர் பழனிச்சாமி, ரவீந்திரநாத்குமார் என்று பெயரை சரியாக சொல்லி அதன் பிறகு வாக்கு கேட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of