நான் முதல்வர் ஆகாவிட்டாலும் இவர் தான் அடுத்த முதல்வர்! பழனிச்சாமி சூசக பேச்சு!

1464

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,

“விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை ஸ்டாலினுக்கு தெரியவில்லை. நான் விவசாயிகளுக்காக பணியாற்றுகிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி.

எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். இப்போது ஒரு விவசாயிதான் உங்களுக்கு முதல்வராக இருக்கிறார். நாளை நான் முதல்வராக இல்லையென்றாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வராக வருவார்.

இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான். நான் முதல்வராக இல்லாவிட்டால் எனக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார்”

என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.

முதல்முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நான் முதல்வராக இல்லாமல் போனாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வர் ஆவார் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.

முதல்வர் ஏன் இப்படி பேசுகிறார், இப்போதே ஏன் அடுத்த முதல்வர் குறித்து பேசுகிறார் என்று பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of