ஓ.பி.எஸ்ஸிடம் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா? – முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி

294

சேலம் மாவட்டத்தில் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல்பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பனமரத்துப்பட்டியில் இயங்கி வரும் எம்.சாண்ட் கிரசர் குவாரியை ஆய்வு செய்தபோது துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வில் எல்லோரும் முதல்-அமைச்சர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்படி என்றால் ஏற்கனவே முதல்-அமைச்சராக இருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?.

வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?, என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of