முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் திமுக-வில் இணைந்தார்..!

2878

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான விஸ்வநாதன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன், மு.க ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெரியம்மா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of