எடப்பாடி பழனிசாமி ராஜா, ஸ்டாலின் கூஜா – ராஜேந்திர பாலாஜி

216

இன்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் தான் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.

அதிமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை என்றும், 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மேலும், தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ராஜாவாகவும், ஸ்டாலின் கூஜாவாகவும் இருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of