எடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷப்புழு – ஸ்டாலின் கடும் சாடல்

398

முதலமைச்சர் பழனிசாமி ஒரு விஷப்புழு என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் மீது அரசியல் ரீதியாகவும், அவரது செயல்பாடு மீதும் விமர்சனம் வரலாம் என்றும், ஆனால் கொலை குற்றச்சாட்டு வரலாமா என்று கேள்வி எழுப்பினார்.

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து தான் பேச நீதிமன்றமே தடை விதிக்க மறுத்துவிட்டதால், இனி ஒரு படி மேலே சென்று பேசுவேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

விசாரணை ஆணையம் அமைத்து அதிமுக அரசு நாடகம் நடத்தி கொண்டிருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of