சில வார்த்தைகளை தமிழில் பேசுவார் வெங்கையா நாயுடு..! – தமிழக முதல்வர் புகழாரம்..!

557

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியை பெற்று தருபவர் வெங்கய்ய நாயுடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம். தமிழகத்தின் மீது தொடர்ந்து அன்பு வைத்திருப்பவர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சில வார்த்தைகளை தமிழில் பேசுவார் வெங்கய்ய நாயுடு.

மாணவர் பருவத்தில் இருந்தே சமூக பணிகளைத் தொடங்கியவர். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டவர். மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுத் தந்துள்ளார் என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலங்களவையில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்தவர் வெங்கய்ய நாயுடு. தமிழகத்தின் உற்ற நண்பனாகத் திகழ்பவர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு என்றார்.