முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கு – சிபிஐக்கு மாற்றம்

536

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்கள் விட்டதில் 4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து. இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை முதலமைச்சருக்கு கீழ் செயல்படுவதால் இந்த வழக்கை முறையாக விசாரித்து இருக்காது எனக் கூறி ஆர்.எஸ். பாரதி தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்படைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of