எங்கள பாத்து அவங்க மிரண்டு போய்டாங்க.., முதல்வர் பளிச்.., பளிச்..,

290

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி களந்து கொண்டு நிர்வாகிகளுடன் பேசுகையில்,

அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதி திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி, நம்முடைய  கூட்டணியைக் கண்டு எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. இந்த கூட்டணி  அடுத்த தேர்தலிலும் தொடரும்.

பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். வாக்குகளை சிறிதும் சிந்தாமல் சிதராமல் பெற வேண்டும். கூட்டணி கட்சியினரும் கவனமான இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of