உதயநிதி ஸ்டாலின யாருக்குப்பா தெரியும்..? – வேலூர் பிரச்சாரத்தில் வெளுத்த முதல்வர்..!

344

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலினையும், அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் பிரச்சாரம் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஒரு குடும்ப அரசியல் செய்யும் கட்சி என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், மு.க.ஸ்டாலினாவது கட்சியில் உறுப்பினராக இருந்தார். அதனால் அவருக்கு கலைஞர் பதவி கொடுத்தார் என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் உதயநிதி ஸ்டாலினை யாருக்கு தெரியும்? அவர் நான்கைந்து படங்களில் நடித்ததால் தான் அவரை எல்லோருக்கும் தெரிந்தது.

அவருக்கு பதவி கொடுத்துள்ள கட்சி திமுக. இப்போது சொல்லுங்கள் திமுக வாரிசு அரசியல் செய்கிறது தானே..”  ஸ்டாலின் திமுக தலைவர் அல்ல..அவர் ஒரு கட்டப்பஞ்சாயத்து தலைவர் என கடுமையாக விமர்சித்தார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of