சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்

600

5-வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் மூலம் காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியது பின்வருமாறு:-

“தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகாவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்தே முன்வைத்துள்ளேன்.

மேலும் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை விரைந்து ஒதுக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்.

சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம் தவிர தமிழகத்திற்கு வர வேண்டிய மானியம், நிதியை உடனடியாக விடுவிக்கவும் கோரியுள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of