மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

475

நேற்று மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தீர்மானத்தின் மீது உரையாற்றினர்.

முதலமைச்சரின் பதிலுரைக்குப் பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தின் இசைவின்றி காவிரியில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.