தொழில் துறையை மேம்படுத்தவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார்- தலைமைச் செயலாளர்

232

தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியே, முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீர் ஆதாரத்தை வீணடிக்காமல் நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிமையாக்க கிடைக்க பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். வெளிநாட்டு பயணத்தின் போது, முதலமைச்சர் பழனிசாமி தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஆட்டோமொபைல்  துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of