சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு – லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு

327

முதலமைச்சர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்பு துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்கான டெண்டர் விடப்பட்டதில் முதலமைச்சர் பழனிசாமி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐ நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்துள்ளது.

டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ஏற்புடையதல்ல என்று லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.E