கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை

457
Edappadi-palaniswamy

கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக வர முடியும் என்றும், ஆனால் வாரிசு அரசியல் உள்ள தி.மு.க.வில் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் பதவியை பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்றதாக குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here