சட்டப்பேரவை தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைப்பு

512

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்துடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்துள்ளதாகவும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.