திருப்பதியில் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி

452
Palaniswamy-Venkaiahnaidu

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை மரியாதை நிமிர்த்தமாக நேற்று சந்தித்தார்.

நேற்று மாலை குடும்பத்துடன் திருப்பதி கோவிலிக்கு சென்ற தமிழக முதல்வர் இன்று தமிழகம் திரும்ப உள்ளார்.

முன்னதாக நேற்றிரவு திருப்பதி திருமலை விருந்தினர் மாளிகையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தங்கியிருப்பதை அறிந்த முதலமைச்சர் பழனிசாமி, அவரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.

சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.