விடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா! ஏன் தெரியுமா..?

532

கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது.

இதில் முறைகேடு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் இரவு – பகல் என போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் பாஜகவினர் போராட்டத்தை தொடங்கினர்.

இதற்காக சாலையில் அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பந்தலிலேயே எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of